வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், தங்களது கட்சியின் கூட்டணிகளுக்கு வாக்கு சேகரித்து அணல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கனிமொழிக்கு ஆதரவாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் திமுக கட்சி அலுவலகத்தில் திமுக கட்சி ஒன்றிய செயலாளர், பேரூர் கழகச் செயலாளர்கள், வலைதள பொறுப்பாளர்கள், திமுக வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 28-03-2023 வியாழக்கிழமை மாலை 6:00 மணி அளவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன்,தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு,அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசியல்
MLA மார்க்கண்டேயன் தலைமையில் தேர்தல் குறித்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு பேருந்து மோதி பொறியாளர் உயிரிழப்பு.
அடுத்த
MLA மார்க்கண்டேயன் தலைமையில் தேர்தல் குறித்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை!
இதையும் படிக்கலாம்
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026
மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!
18 Sep 2026