விளாத்திகுளம் அருகே 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா!
'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பி. துரைசாமிபுரம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அருண்ராஜா தலைமையில் கிராமத்தில் வேம்பு, புங்கை, மாமரம், சீதா, தென்னை, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அருகே 'வீ த லீடர்ஸ்' அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர், மேலும் அருகே 'வீ த லீடர்ஸ்' அமைப்பு தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் என்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அருண் ராஜா தெரிவித்துள்ளார்.
விழாவிற்கு விளாத்திகுளம் பொறுப்பாளர் அருண் ராஜா தலைமை தாங்கினார்,காட்டு ராஜா, பொன்ராஜ், சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடேஷ், அருள்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர்.