எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை !!!! திமுக எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள் !!! நிச்சயமாக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பெற்று தருகிறேன் உறுதியளித்த எம்எல்ஏ - விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பேரூராட்சியில் அலுவலகத்தில் ரூ.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மன்ற கூட்டரங்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து அயன் கரிசல்குளம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் முற்றுக்கையிட்டு தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி முறையிட்டனர். மேலும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை பெற்றுத் தரும்படி கோரிக்கை மனுவையும் அளித்தனர்.மனுவினை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உங்களது தொலைபேசியில் என்ன மெசேஜ் வந்ததாக கேட்டறிந்தார்.
பின்னர் மனு பதிவிடும் போதும் சிறு தவறுகள் ஆதார் நம்பர் அல்லது அக்கவுண்ட் நம்பர் பெயர் தவறாக பதிவு செய்வது போன்ற காரணங்களால் கிடைக்க தடையாக இருந்திருக்கலாம் அது என்னவென்று பார்த்து உங்கள் அனைவருக்கும் தகுதி உடைய அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார்.விவசாய பணிகளும் இல்லை, தங்களுக்கு ஆயிரம் ரூபாயும் கிடைக்கவில்லை என்று பெண்கள் புலம்பியவாறு சென்றனர்.
Vilathikulam
எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை?திமுக எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி எம்எல்ஏ மார்க்கண்டேயன் !
அடுத்த
100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026