விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் மற்றும் வேம்பார் தடுப்பணைகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் தடுப்பணையில்
தற்போது தொடர் கனமழையின் காரணமாக தடுப்பணை நிரம்பி வழிந்து, தடுப்பனையிலிருந்து
கடலுக்கு செல்லும் நீரை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தடுப்பணை பாதுகாப்பாக
உள்ளதா, நீர் செல்லும்
பாதையில் வளர்ந்துள்ள சீமை கருவேலும் மரங்களை அகற்றுமாறு, நீர் செல்லும் பாதையை ஆளப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் அறிவுறுத்தினார்,
அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள
தடுப்பணை வறண்ட நிலையில் இருப்பதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்து மழை பெய்தும் நீர் வரவில்லை என்பதால் வைப்பார் தடுப்பனை இருக்கன்குடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை
எடுக்கப்படும் என வைப்பார் கிராம மக்களிடம் MLA மார்க்கண்டேயன் உறுதியளித்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி
தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள்
தொண்டர்கள், வைப்பார் மற்றும் வேம்பார் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
தடுப்பணைகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு போக்குவரத்து பணிமனையில் தேங்கிய மழை நீரை எம்எல்ஏ மார்க்கண்டையன் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
அடுத்த
வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026