தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் விளாத்திகுளம், வேம்பார்,வைப்பார், குளத்தூர், கோவில் குமரெட்டையாபுரம் உள்ளிட்ட 187 திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 2143 ஏக்கர் நிலங்கள் உள்ளன, இந்த திருகோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உத்தரவின்பெயரில், தனி வட்டாட்சியர் நம்பிரயார், விளாத்திகுளம் சரக ஆய்வாளர் முருகன், நில அளவையர்கள் வினோத் குமார் அஜித்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், விளாத்திகுளம், துலுக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரேவார் கருவி மூலம் கடந்த 3 நாட்களாக அளவீடு செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து, நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து நிலம் அளவிடும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
187 இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 2143 ஏக்கர் நிலம் அளவீடும் செய்யும் பணி தீவிரம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் நிகழ்ச்சியால் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் : 8km தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
அடுத்த
அரசு பேருந்து மோதி பொறியாளர் உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026