விளாத்திகுளம் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழா :  ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு..!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவசாமி திருக்கோவிலின் ஆடி மாத கொடை விழா கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினசரி காளியம்மன் உட்பட இதர தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்  (05.08.2026) காலை திருக்கோவிலின் முன்பு ஏராளமானோர் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினார். அதேபோன்று மாலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பல வகையான முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் வேம்பார் ரோடு,  காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் வழியாக விளாத்திகுளம் வைப்பாற்றுக்குச் சென்றனர். மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மன், சூலாயுதம் உட்பட பல்வேறு வகையான முளைப்பாரிகளை எடுத்துச் சென்ற காட்சிகள் காண்போரை பக்தி பரவசமடையச் செய்தது.