கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்தியாலயா பள்ளி 13-ம் ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் நிகழ்வில் பள்ளி கல்வி குழும தலைவர் வீமராஜ் பள்ளி செயலர் சுப்பா ரெட்டியார் பள்ளி நிர்வாக அதிகாரி கணேசன் பள்ளி முதல்வர் அமராவதி உள்ளிட்ட ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.