விளாத்திகுளத்தில் வசந்த் & கோ- வின் 149-வது கிளை திறப்பு விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வசந்த் & கோ- வின் 149-வது திறப்பு விழா கோலங்களமாக நடைபெற்றது. வசந்த் அன் கோ நிர்வாக பங்குதாரர்கள் தமிழ் செல்வி வசந்தகுமார், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தார்
மேலும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் மற்றும் கட்டில் மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் விற்பனைக்கு தொடங்கியது. மேலும் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம்ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கேஸ் ஸ்டவ் இலவசமாக வழங்கப்படும் என்பதால் முதல் நாளே விளாத்திகுளத்தில் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்க வருகை புரிந்தனர்.
முதல் விற்பனையை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் துவக்கி வைத்தார்
விளாத்திகுளத்தைச் சேர்ந்த குட் லக் செல்வராஜ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
இதில் பேரூராட்சி தலைவர் சூர்யா அயன் ராஜ் மற்றும் விளாத்திகுளத்தைச் சார்ந்த பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மேடை சேர்மன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தனர்.