தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிம்முர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் கனகராஜ்(20) ஆகியோர் இருவரும் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவர்களும் தூத்துக்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு சென்று விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் நாகலாபுரம் கல்லூரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது. விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரி அருகே லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் அஜித் குமார் மற்றும் கனகராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த இருவரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம்-5 வாகனங்கள் பறிமுதல்.
அடுத்த
தனது திருமணத்திற்கு மாட்டுவண்டி பந்தயம் வைத்து அசத்திய பந்தய வீரர் : 3-ம் பரிசை வென்ற புதுமாப்பிள்ளை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026