சிறையிலிருந்து வெளிவந்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு விளாத்திகுளத்தில் உற்சாக வரவேற்பு!
எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஆதரவாளர்களின் வாகனங்கள் மற்றும் ஆதரவாளர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்ற கூட்ட கதவை பூட்டினால், விஜயின் எலும்பை உடைப்பேன் என்று அவதூறாக பேசிய புகாரின் பேரில் கடந்த ஜூலை 20-ம் தேதி வீட்டிலிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனை போலீசார் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர், அதனைத்தொடர்ந்து ஜாமீன் வழங்ககோரி திமுக சார்பில் தூத்துக்குடி நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் திமுக எம்எல்ஏ மார்கண்டயேனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது, இந்தநிலையில் இன்று பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுதலையான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டயேனுக்கு திமுக தொண்டர்கள் பாளையங்கோட்டைக்கு சிறைச்சாலைக்கே சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் வந்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர், அதேபோல் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையனை வரவேற்பதற்காக திமுக தொண்டர்கள், மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த ஏராளமான வாகனங்களால் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பின்பு காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.