தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரங்குடி ஊராட்சியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜக்கனி என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதால், அவரின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல்த்தாய், ராஜக்கனி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த தெருக்குழாயை அறுத்து குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளார். ஏன் குழாயை அறுக்கிறீர்கள்? என்று ராஜக்கனி கேட்டதற்கு, அவரின் வீட்டின் முன்பு இருக்கும் தொட்டியை காரணமாக காட்டி தொட்டியை மூடினால் தான் குடிநீர் இணைப்பு வழங்குவோம் என்று மழுப்பலாக பதில் கூறி சென்றுள்ளனர். மேலும், ராஜக்கனி என்பவர் பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்பை துண்டித்து ஒரு வருட காலம் ஆகியும் அவருக்கு குடிநீர் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் விரோத போக்காக செயல்பட்டு வருவதாகவும் இதனால் குடிநீரை பணம் கொடுத்துதான் வாங்கி வருகிறேன் என்றும், இருப்பினும் இதுவரை ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி வருகிறேன் எனவும் பாதிக்கப்பட்ட ராஜக்கனி கூறுகிறார். மேலும் தனக்கு துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நம்மிடம் வேதனை தெரிவிக்கிறார்.
Vilathikulam
தனிநபருக்கு குடிநீர் வழங்காமல் விரோதப் போக்கில் செயல்பட்டு வரும் ஊராட்சி நிர்வாகம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ-விடம் வாக்குவாதம்!
அடுத்த
எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் எப்போது? : அனாமத்தாக போகும் உயிர்கள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026