விளாத்திகுளம் அருகே வெகு விமர்சையாக  நடைபெற்ற குருவார்பட்டி ஸ்ரீ ரெங்கப்பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குருவார்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ரங்கப்பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக   நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரபாதம், நித்ய பூஜை, புண்யாகவாசனம், ஹோமங்கள், மகா பூர்ணாஹுதி, கோதானம், தசதானம், நவக்கிரஹ பரிகாரம், தன்வினாதானம், கும்பத்தில் ஜலசமாரோபணம், சுயபாத தரிசனம், மூலவர்த்திகள், விமானங்கள் மற்றும் சம்ப்ரோக்ஷணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


இதனைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர்.