எட்டையாபுரத்தில் தனது தங்கையுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில்  வெளியிட்ட இளைஞரின் அண்ணனுக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது!


4  நாட்களுக்குப்பின்பு செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார்!


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெப்பக்குளம் அருகே வடக்கு ரதவீதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் முத்துக்கணேசன் (29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மதியம் வீட்டில் முத்துக்கணேசன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, பைக்குகளில் தப்பியோடினர்,ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கணவனை பார்த்து அவரது மனைவியை மகேஸ்வரி கதறி அழுதுள்ளார். 

அப்போது அந்த வழியாக பாம்பு பிடிப்பதற்காக சென்ற தீயணைப்பு துறையினர் அவரது அலறல் சத்தத்தை கேட்டு, அவர் வீட்டிற்குச் சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்கணேசனை மீட்டு, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தற்போது அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


முன்விரோதம் காரணமாக இந்தசம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு எதுவும் காரணமா?  என்பது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இதற்கிடையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் கோவில்பட்டி- விளாத்திகுளம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . விரைந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.



இதற்கிடையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எட்டயபுரம் உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  


எட்டயபுரம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் குறித்தும் விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்வா வயது (23) அவரது சித்தப்பா மகன் கருப்பசாமி வயது 20 என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக அவர்களது மொபைல் ட்ராக்குகளை வைத்து தேடிபார்த்தனர், இந்நிலையில் அவர்கள் மதுரையில் இருப்பதாக தெரிந்தது இதனையடுத்து எட்டயபுரம் உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் முதற்கட்ட விசாரணையில் விஷ்வாவின் தங்கைக்கும் முத்துகணேசன் தம்பி மாரி செல்வத்திற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,


இந்நிலையில் மாரிச்செல்வம் விஷ்வாவின் தங்கையுடன் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இதனையடுத்து விஷ்வாவின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பெயரில் மாரி செல்வத்தை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், தொடர்ந்து விஸ்வா மாரிசெல்வத்தின் குடும்பத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது சித்தப்பா மகன் கருப்பசாமியை அழைத்து வந்து கடந்த இரண்டாம் தேதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த முத்து கணேசனை சரமாரியாக வெட்டினேன் அங்கிருந்து விருதுநகர் மார்க்கமாக மதுரைக்கு சென்றேன் எட்டயபுரம் போலீசார் என்னை சுற்றி வளைத்து பிடித்தனர் என விஷ்வா போலீசாரிடம் தெரிவித்துள்ளார், தொடர்ந்து போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.