தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், "லியா கைப்பந்து கழகம்" மற்றும் கனரா வங்கி சார்பில், 19-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, திருநெல்வேலி, ஓசூர், ஒட்டன்சத்திரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஆண்கள் அணியினரும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அணியினரும் கலந்து கொண்டுள்ளனர். இன்று மற்றும் நாளை என 2 தினங்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை கனரா வங்கியின் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் ஜக்கலா சுரேந்திர பாபு போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக துணை தாசில்தார் சீனிவாசன், படர்ந்தபுளி ஊராட்சி மன்றத்தலைவர் சோலை ராஜ், விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ரீஜென்ட் டெக்ஸ்டைல்ஸ் ஹரிபாலகன், தொழிலதிபர் ராஜாங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், வழக்கறிஞர் சீனிவாசன், தலைமையாசிரியர் பானுமதி, களம் பயிற்சி மையம் சீனிவாசன், கனரா வங்கி மேலாளர் சுகன்யா, உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி பேபி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், கிராம பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
"படர்ந்தபுளி லியா கைப்பந்து கழகம்" சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி : பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் வழக்கறிஞர் குமாஸ்தா குத்தி கொலை.
அடுத்த
தூத்துக்குடியில் தொடரும் குற்ற சம்பவங்கள் -செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026