மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் : நெடுஞ்சாலையில் உள்ள மதுபானகூடத்தால் அடிக்கடி விபத்து!
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் மனமகிழ் மன்றத்தை ஆய்வு செய்யாத அரசு அதிகாரிகள் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பிரதான மதுரை சாலையில் ரிலாக்ஸ் ரிக்கிரேஷன் & ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது, இந்த மன்றத்திற்கு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் செயலாளராக இருந்து வருகிறார்.
பொதுவாக மனமகிழ் மன்ற சங்கவிதிகளின்படி உறுப்பினர்களின் நலனுக்காக விளையாட்டு நடவடிக்கைகள், வாசிப்பு வகைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இருப்பது வழக்கம்,ஆனால் மனமகிழ் மன்றத்தில் எந்த ஒரு விளையாட்டு நடவடிக்கைகள் வாசிப்பாறைகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும், தாராளமாக மது விற்பனை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், மனமகிழ் மன்றத்தில் தலைக்கேறிய மதுவை அருந்திவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மனமகிழ் மன்றத்தில் இருந்து மதுபோதையில் வெளியே வரும் மது பிரியர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது வாகனத்தை மோதி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இந்த மனமகிழ் மன்றம் அருகே பெரும்பாலான குடியிருப்புகள்,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,கால்நடைமருத்துவமனை, மகளிர் பள்ளி,அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இந்த மனமகிழ் மன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு குறைவாகவே இருந்து வருகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இளைஞர்களை மது பழக்கத்திற்கு அடிமையாக்கும் நோக்கத்துடன்,காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மது விற்பனையை மட்டுமே செய்து,அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல், இளைஞர்களை இருக்கும் பொருட்டு 1000 ரூபாய்க்கு 6 பீர்கள் என்று விளம்பரம் செய்து இளைஞர்களை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி இப்பகுதியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் இந்த மனமகிழ் மன்றத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர்.
1. மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவை ஆணையரகம் சேப்பாக்கம் சென்னை.
2. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்.
3. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
4. விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர்.
5. விளாத்திகுளம் காவல் ஆய்வாளர்
6. பதிவு ஆய்வாளர் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை.
7. மாவட்ட பதிவாளர் சங்கங்கள் பதிவு தூத்துக்குடி.
8. விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வரும் ரிலாக்ஸ் ரெகிரியேசன் & ஸ்போர்ட்ஸ் கிளப் மனமகிழ் மன்றத்தின் மீது எடுக்கக்கோரி மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார்,அந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
1.மதுவிலக்கு ஆணையம்.
2. மாவட்ட ஆட்சியர்
3. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
4. மாவட்ட டாஸ்மார்க் மேலாளர்
5. மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனமகிழ் மன்றத்தை முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை எந்த அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும்,இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் உள்ள இந்த மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூட வேண்டும் என்று ரமேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தற்போது உள்ள தமிழக வெற்றிக்கழக ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஏற்கனவே பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அருகே உள்ள 717 மதுபான கடையை மூட உத்தரவிட்டு உள்ள நிலையில், இந்த தனியார் மனமகிழ் மன்றத்தை மூடாததற்கு காரணம் என்ன என தெரியவில்லை என்று ரமேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.