விளாத்திகுளம் அருகே அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில்  இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!


காவல்துறையின் நெருக்கடியையும்  மீறி மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை நடத்தி காட்டிய கிராம பொதுமக்கள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பெத்தனாச்சி அம்மன் திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் 43-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 


இந்தப்பந்தயத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக முறையாக நோட்டீஸ் அடித்து மேல்மாந்தை கிராம மக்கள் சூரங்குடி காவல் நிலையத்தில் முறையாக அனுமதி கேட்டுள்ளனர்.


கடந்த 42 ஆண்டுகளாக முறையாக அனுமதி கொடுத்து வந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார்,ECR சாலையில் மாட்டு வண்டியில் பந்தயம் நடத்த அனுமதி இல்லை என்றும், வர்ணரையாளர் வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டக்கூடாது என்றும், அதையும் மீறி மாட்டு வண்டிபந்தயம் நடத்தினால், மாட்டுவண்டி பந்தயம் நடத்தும் விழா கமிட்டியினர் மீது  வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சில நாட்களாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் மேல்மாந்தை கிராம மக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.



காவல்துறை நெருக்கடி மற்றும் மிரட்டலை மீறியும் இன்று மேல்மாந்தை கிராமத்தில் மாலை வர்ணரையாளர் வாகனம் இல்லாமல்  இரண்டு பந்தயங்களை நடத்தினர்.



இதுகுறித்து மேல்மாந்தை கிராம மக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் 18 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து காலம் காலமாக கோவில் திருவிழாக்கள் நடத்தி, கடந்த 42 ஆண்டுகளாக இதே ECR சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தி வருகிறோம், கடந்த மாதம் கூட எங்களின் கிராம் அருகே உள்ள ஈ.வேலாயுதம் கிராமத்தில் ECR சாலையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.



ஆனால் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவில்,தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களின் புகைப்படம் மற்றும் பெயர்கள் ப்ளெக்ஸ் பேனரின் வைக்காத காரணத்தினால் தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை வைத்து தங்களை மிரட்டுவதாகவும், மாட்டு வண்டி பந்தைதினை நடத்த விடாமல் நெருக்கடி செய்வதாகவும் மேல்மாந்தை கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



இன்று பூஞ்சிட்டு பந்தயத்தில் இரு பிரிவுகளாக 35 ஜோடிகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன,அதே போல் நாளை காலை நடுமாட்டு வண்டிகள் பந்தயம் மற்றும் சின்ன மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.