தேமுதிமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த கட்சி தலைவர்கள், நடிகர்கள், திரைத்துறையினர், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவையொட்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட வருகின்றது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்சியினர் சிலர் மொட்டை அடித்துக்கொண்டு கட்சியின் கொடி கம்பம் முன்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவியபடி... கதறி அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.. மேலும், கிராம மக்களும் கட்சியினருடன் சேர்ந்து கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்த் திருவுருப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Vilathikulam
விஜயகாந்த் மறைவையொட்டி மொட்டை அடித்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் MLA சின்னப்பன்!
அடுத்த
மழை வெள்ள நிவாரணத்தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026