புதூர் வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
விவசாயிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் “ சிரித்தபடி திணறிய ” அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில், 1.2025 2026 நிதி ஆண்டில் கடும் வறட்சியால் ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு மற்றம் காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.
2. உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்தது போல் மிளகாய், கொத்தமல்லி, சோளம், கம்பு, மக்காசோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களுக்கும் அரசே விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
3. தமிழக அரசு அறிவித்த பயிர்கடனை திரும்பபெற்று முழுமையாக பயிர்கடனை அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. அனைத்து கிராம கண்மாய் மற்றும் ஊரணிகளில் வண்டல்மண் மற்றும் கரிசல் மண் எடுக்க அனைத்து விவசாயகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
5. வரும் காலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் புதூர் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து விவசாயிகளை புதூர் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு துறைசார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.
காலை 10 மணிக்கு வேளாண்துறை அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள், காலை 11 மணி ஆன நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஏராளமான விவசாயிகள் புதூர் வேளாண்மைதுறை அலுவலகம் முன்பு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல் போராட்டம் அறிவித்திருந்தும் அதை பெரிது படுத்தாமல் மதியம் 12 மணியளவில் “சாவகாசமாக” வந்த அதிகாரிகளால் ஆத்திரமடைந்த விவசாயிகள் புதூர் வேளாண்மை துறை அலுவலகம் முன்பு தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர்,தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி,மான் ஆகிய காட்டு விலங்குகள் தொல்லை, கண்மாய்க் குளங்களில் நீர் இல்லாமல்,குடிநீர் பிரச்சனை கால்நடை வளர்ப்பதிலும் தொல்லை என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விவசாயிகள் அதிகாரியிடம் முன் வைத்தனர்,இதற்கு அதிகாரிகளோ சிரித்தபடி பதில் கூற முடியாமல் திணறி மழுப்பலாகப் பதில் கூறினர். அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் அவகாசம் தாருங்கள் உங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வரும், அல்லது வரவில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று கூறியதால் அங்கிருந்து விவசாயிகள் கலைந்தசென்றனர்.