தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன் சுடலைமுத்து (52), இவர் எட்டையபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு 02-04-2024 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நீராவி புதுப்பட்டி கிராமத்திலிருந்து கோட்டநத்தம் கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பிள்ளையார்நத்தம் அருகே சுடலைமுத்துவின் தோளில் அணிந்திருந்த துண்டு ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி, நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து சுடலை முத்துவின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒருவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு!
அடுத்த
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026