விளாத்திகுளம் அருகே பழுதான நிலையில் உள்ள ஆதனூர் பாலத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆதனூரில் இருந்து மிளகு நத்தம் செல்லும் ஆற்றுப்பாலம் மிகவும் பழுதான நிலையில் உள்ளதை விரைவில் சரி செய்து தர விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பொதுமக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆதனூர் மிளகுநத்தம் செல்லும் பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்து விரைவில் சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் காசிவிஸ்வநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஹரிபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Vilathikulam
ஆதனூர் பாலத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை வரி உயர்வை கண்டித்து விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
40 ஆண்டுகள் சுற்று சுவர் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? அரசு அதிகாரிகள், அரசியல் மாற்றமே மட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026