தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூபாய் 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் ராமச்சந்திராபுரம் முதல் லட்சுமிபுரம் வரை சாலை பணிகளையும் அதனை தொடர்ந்து, உபரி நிதியின் கீழ் ₹ 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
சாலைப் பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகள் பாஸ்புக் மட்டும் கொடுத்து என்ன பயன்... அரசுஉதவி எதுவுமே செய்யலயே...!"
அடுத்த
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்...
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026