தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், கால்நடைகள், வீடுகள் ஆகியவை பெரிதும் சேதம் அடைந்து மக்களின் வாழ்வாதாரம் பெரிதும்
பாதிக்கப்பட்டது. நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பாதிப்புக்கு ஏற்றார் போல் நிவாரண தொகை அறிவித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் பிரதிநிதி மூலமாக நிவாரண தொகை வழங்கப்பட்டு
வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்துக்கு
உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் 108 நபர்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தலா பத்தாயிரம்
ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர்
மல்லிகா, எட்டையாபுரம்
பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள்,
பொதுமக்கள் என
ஏராளமானுடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ள நிவாரணத் தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ள நிவாரணத் தொகை 6000 வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
அடுத்த
40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பொதுப்பணித்துறை கண்மாய் - ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026