விளாத்திகுளம் அருகே துரைச்சாமிபுரம்
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரிமூட்டத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட
லட்சுமணனுக்கு எம்.எல்.ஏ
மார்க்கண்டையன் நிதி உதவி வழங்கினார்!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்
(55) என்பவர் கரிமூட்டம்
தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மழை
வெள்ளத்தில் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரிமூட்டம்
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனை அடுத்து விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரிமூட்டத்தினை
நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட லட்சுமணனுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில்
விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார
வளர்ச்சி அலுவலர் சசிகுமார், துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரி மூட்ட தொழிலாளருக்கு ரூ. 50,000 நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையாபுரம் அதிமுகவினர் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
அடுத்த
விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026