விளாத்திகுளம் அருகே அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம்  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் மகா கும்பாபிஷேக விழாவானது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி அளவில் மங்கள இசை, ஸ்ரீஹரித்ரா கணபதி பூஜை, ஜெயபாராயணம் ஸ்ரீகோமாதா பூஜை, ஸ்ரீஹமைந்த் ஜெப ஹோமம், ஸ்ரீகாயத்ரீஹோமம், நாடிசந்தானம், ஸ்ரீமஹா பூர்ணாஹூதி, தூபதீப ஆராதனை, ஆசீர்வாதத் திருமுறைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடு நடைபெற்று புனித நீரால் அபிஷேகம் செய்து மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா தீபாதாரணை காட்டப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இதர பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாதாரணை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.