தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகனான அழகு பாண்டி(51) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கூரியம்மாள்(46) என்ற மனைவியும்,1 மகன், 1 மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கூரியம்மாள் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது கணவர் அழகு பாண்டி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் கூரியம்மாள் வேறொரு நபருடன் தகாத உறவை கைவிடாததால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (18.05.2024) இரவு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அழகு பாண்டி தனது மனைவியான கூரியம்மாளை கம்பால் அடித்து வீட்டில் இருந்த சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டிலேயே தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று (19.05.2024)தனது மனைவியை சேலையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்த அழகு பாண்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைத்தனர்...
Vilathikulam
மனைவியை கொலை செய்த லாரி டிரைவர் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026