நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்று சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிவுறுத்தலின்பேரிலும், மாநில துணைத்தலைவர் சண்முகம் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட தலைவர் ராகுல் தலைமையில்
இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ மற்றும் தொகுதி தலைவர் அற்புதராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில், "சூப்பர் சக்தி ஷீ" பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அருகில் இருந்த பூ வியாபாரம் செய்துவரும் மகளிரின் மூலம் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் பிரதமர் இராஜிவ்காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் "சூப்பர் சக்தி ஷீ" -யை வெளிப்படுத்தும் விதமாக மகளிரை கொடியேற்ற வைத்த காங்கிரஸ் இளைஞரணியினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் 77,வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
அடுத்த
சாலையை சீரமைக்க வலியுறுத்தி துண்டு விரித்து படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி - 6 பேர் கைது!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026