பொதுமக்களுக்கு விளாத்திகுளம் பேரூராட்சி  நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி விளாத்திகுளம் பேரூராட்சி பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், விளாத்திகுளம் பகுதியில் தூய்மை பணியை மேம்படுத்தும் நோக்கில் விளாத்திகுளம் பேரு ராசி நிர்வாகம் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை நாள்தோறும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என இரண்டு பிரிவுகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். 

மேலும் ஆபத்தான மருத்துவ கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் ,டியூப் லைட்டுகள், மின்னணு கழிவுகள், நாப்கின்கள் மற்றும் முக கவசங்கள் போன்றவற்றை சாதாரண குப்பைகளுடன் கலக்காமல் தனியாக சேகரித்து வழங்க வேண்டும். வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் குப்பைகளை தரம் பிரித்து வழங்கத் தவறும் பட்சத்தில் உங்கள் வீடுகளில் திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது, விளாத்திகுளம் பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த தூய்மை பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிகளை மீறி ஒரு மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.