தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பார் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் ஆதி திராவிடம் மக்கள் பயன்படுத்தி வந்த சுமார் 150 ஏக்கர் உப்பளத்தை தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பார் அருகே உள்ளது துலுக்கன்குளம் கிராமம் இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் நான்கு தலைமுறைகளாக அந்தப் பகுதியில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி செய்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு ஆதி திராவிட குடும்பங்கள் பயன்படுத்தி வரும் உப்பளங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சிப்காட் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் 150 குடும்பங்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தி வரும் உப்பளங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாங்கள் நான்கு தலைமுறையாக பயன்படுத்தி வரும் உப்பள நிலத்த்திற்கு தங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
Vilathikulam
துலுக்கன்குளம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அனைவரைக்கும் கிடைக்காது - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி?
அடுத்த
உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 441-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026