விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,எட்டயபுரம், வேம்பார், சூரன்குடி, குளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இன்றும் வழக்கம் போல காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், காணப்பட்டது மட்டுமின்றி சாரல் மழையும் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. எட்டயபுரம் , தாப்பாத்தி முத்தலாபுரம் வீரப்பட்டி சிந்தலக்கரை , அயன்ராசா பட்டி, மேலக்கரந்தை, மாசார்பட்டி, பகுதிகளில் சுமார் 2மணி நேரத்திற்க மேலாக பரவலான மழை பெய்ததது.
அதேபோல் கே. துரைச்சாமிபுரம், மாதலாபுரம், காடல்குடி, கந்தசாமிபுரம், பூதலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, கடுமையாக அடித்த வெயிலின் காரணமாக பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் இன்று பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையின் காரணமாக பயிரிடப்பட்ட விவசாயிகள் களை எடுப்பதற்கு ஏற்ற மழை என்று தெரிவித்துள்ளனர்
Vilathikulam
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயிகளுக்கு வழங்கபடும் இழப்பீடு தொகையை தனியார் இன்சூரஸ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு தான் இத்திட்டம் வழி வகிக்கிறது
அடுத்த
செண்பகவல்லியம்மன் திருக்கோவில் ஐப்பசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026