எட்டயபுரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலையில்கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய்பாலாஜி ஆய்வு! 


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும்   பாரதி கூட்டுறவு நூற்பாலையில்  கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய்பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். நூற்பாலையின் ஒவ்வொரு பகுதியாக நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள அதிகாரிகளிடம் நூற்பாளையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, உற்பத்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் வழங்கினார். மேலும் நூற்பாலையில்பணியாற்றக்கூடிய தொழிலாளர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.தொழிலாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்தஆய்வின்போது கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, அரசு செயலாளர் ஆர்.லில்லி, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) சீ.சுரேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எட்டையாபுரம் நகரசெயலாளர் கனகராஜ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரெகுராமபுரம் கண்ணன்,  நகர நிர்வாகி சரவணகுமார், பாலாமணி, தவமுனியசாமி, சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.