விளாத்திகுளத்தில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி,பொதுமக்களுக்கு பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு 100-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டத்துணைச்செயலாளர் ராஜபாண்டி, கிழக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகரச்செயலாளர் கோட்டைச்சாமி, நகர அவை தலைவர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் வீராச்சாமி, முரளி ,ஆதிலிங்கம்,தேமுதிக கிளைச்செயலாளர்கள் சங்கரன், மணிகண்டன், கந்தராஜ், முருகேசன், சங்கர்கணேசன், உட்பட தேமுதிக மகளிர் அணி ராணி பரிமளா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.