எட்டையாபுரத்தில் இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தட்டி கேட்ட குடும்பத்தாரை அரிவாளுடன் கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட தவெக நிர்வாகியின் குடும்பத்தினர் வீடியோ வைரல்!
செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தால் உங்கள் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வேன் என பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டிய காவல் ஆய்வாளர்!
தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழக வெற்றிக்கழக நகர செயலாளராக கனகராஜ்(25) என்பவர் பதவி வகித்து வருகிறார், இவரது தம்பி கார்த்திக்(18), அப்பகுதியில் உள்ள மாற்று சமுதாய இளம்பெண்ணை ஒருவரை தினமும் பின்தொடர்ந்து, தனது என்பீல்ட் புல்லட் பைக் வாகனத்தில், அந்த இளம்பெண்ணை பார்த்தால்,ரேசிங் செய்து,ஹாரன் அடிப்பது வீட்டுக்கே சென்று சில நேரங்களில் வீட்டு வாசலில் நின்று தொந்தரவு செய்வது,உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் செய்து அப்பெண்ணிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார், இதனால் அந்தஇளம்பெண்ணின் குடும்பத்தார், கடந்த 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கார்த்திக்கை சத்தம் போட்டு உள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரது சகோதரர் தமிழக வெற்றி கழக நகரச்செயலாளர் கனகராஜ், விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தற்போதைய நிர்வாகிகயான மோட்சம், கனகராஜ் தந்தையான திமுக நிர்வாகி சின்னப்பர் உள்ளிட்டோர்,அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு கையில் அரிவாளுடன் சென்று, கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபடமுயன்றுள்ளனர்.
இதனை அடுத்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் அங்கு வந்து கார்த்திக்கிடமிருந்து அருவாளை பிடுங்கி இருதரப்பையும் சமாதானம் படுத்தி அங்கிருந்து சென்றனர்.
இதனை அடுத்து அந்தவீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எட்டையாபுரம் போலீசார், எட்டையாபுரம் தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர் கனகராஜ் (25), கார்த்திக்(18), விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மோட்சம் (48), திமுக நிர்வாகி சின்னப்பர், மற்றும் 18 வயது கீழ் உள்ள இரண்டு சிறார்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் இளம் பெண்ணின் குடும்பத்தாரான அருண்குமார் (25), மோகன்(30), தமிழ்வண்ணன் மற்றும் 50 வயதுடைய இரண்டு பெண்கள், மற்றொரு நபர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகி கனகராஜ் குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற கனகராஜ்,கார்த்திக்,மோட்சம்,சின்னப்பர் உள்ளிட்ட நான்கு பேர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்,அதேபோல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இளம்பெண் குடும்பத்தாரும் சிலர் தலைமறைவாக இருப்பதாக என காவல்துறையினர் கூறிவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகியான மோட்சம் என்பவர் அப்பகுதியில் சுதந்திரமாக சுற்றி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக நகரச்செயலாளர் கனகராஜ் தந்தையான திமுக சின்னப்பர் கடந்தாண்டு ஒரு இளம் பெண்ணுக்கு செவிலியர் வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார் அவர் மீது புகார் எழுந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கதாகும்.