விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி! 


கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு! 



தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளத்தில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.


விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி மறைந்த உடற்கல்வி இயக்குனர் பால்சாமி நினைவாக முதலாம் ஆண்டு மினி மராத்தான் போட்டி விளாத்திகுளத்தில் வைத்து நடைபெற்றது.


ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி பிரிவாக நடைபெற்ற போட்டியை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கொடி அசைத்த தொடங்கி வைத்தார்.


விளாத்திகுளம் - எட்டையாபுரம் சாலையில் 14 கிமீ தொலைவு கொண்ட ஆண்களுக்கான போட்டிகள் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ், 2வது பரிசு ரூ 8 ஆயிரத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுரேஷ்குமார்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம் ஆகியோர் பெற்றனர். 


10 கிமீ தொலைவு கொண்ட பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஜென்சி,2வது பரிசு ரூ 8 ஆயிரம்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டம் புதூரை சேர்ந்த உதய தர்ஷினி ,பவானி ஆகியோர் பெற்றனர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், வாக்கிங் ஃபிரண்ட்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர் வையணன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் இம்மானுவேல்,ராமசுப்பு,  பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, எஸ்ஐ நாராயணன்,சிறப்பு எஸ்ஐ கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.