விளாத்திகுளம் அருகே O.துரைச்சாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புதம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா!



தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே O.துரைச்சாமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புதம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மங்கள வாத்தியத்துடன் தொடங்கி, மஹா கணபதி பூஜை, புண்யாக வாசகம், பஞ்சகவ்ய பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, ஸ்ரீ விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, அம்மன் பாசறை அமைப்பு, வேதிகா அர்ச்சனை மற்றும் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், யாகசாலை பூஜை, லக்ஷ கலச நாமம், நாடி சந்தானம் எனப்படும் சக்தி ஏற்றுதல் நடைபெற்று, கோபுர கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து புதம்மன் கோவில் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. 


நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில் O.துரைச்சாமிபுரம் மற்றும் நாகலாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,மாவட்ட பிரதிநிதி முனியசாமி கிளைச்செயலாளர்கள் வேலுச்சாமி,ஜெயமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.