தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே
எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக்கூட மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற
தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் ரொவினா ரூத் ஜென் கட்சி நிர்வாகிகளுடன் வரும்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக எட்டையாபுரம் தேவர் திருஉருவசிலைக்கு வேட்பாளர் ரொவினா ரூத் ஜென்
மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில்
உள்ள பாரதியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்
வழக்கறிஞர் பாண்டி தலைமையில் நடைபெற்றது,மேலும் தூத்துக்குடி
நாடாளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர்,மண்டல பொறுப்பாளர் ஆனந்த் வடக்கு மாவட்ட தலைவர் செயபாசு,எட்டயபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர்
சதிஷ்குமார், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்
ரமேசுகுமார்,விளாத்திகுளம் தொகுதி தலைவர் கருப்பசாமி,செய்தி தொடர்பாளர் பாலாஜி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி செயலாளர்
ரவிகுமார், கோவில்பட்டி தொகுதி தலைவர் தங்கமாரியப்பன்,மண்டல மகளிரணி செயலாளர் அன்னலெட்சுமி,சுற்றுச்சூழல்
பாசறை மருதம்மாரியப்பன்,சோலைகணேஷ்,செல்வகுமார்,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஏராளமான நாம் தமிழர் கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜென்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்லூரி மாணவர்கள் சார்பில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அடுத்த
பாரதி கண்ட புதுமை பெண்ணாக வந்துள்ளேன் - நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026