விளாத்திகுளம் அருகே குடிநீர் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்யும் தனிநபர்!
தனிநபருக்கு உடந்தையாக செயல்படும் வருவாய் துறை மற்றும் ஊராட்சித்துறை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் கால்நடை பராமரிப்பிற்கும் பல ஏக்கர் பரப்பளவில் கண்மாய் அமைந்துள்ளது.
இந்தகண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்களும் அதிக அளவில் காணப்படுகிறது, இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஊர் கண்மாயின் கரையை தனது விலை நிலத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ஏற்கனவே ஊர் பொதுக் கண்மாயினை ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு உள்ள சீமை கருவேல மரங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளதோடு, குடிநீர் கன்மாயையும் பல ஏக்கர் பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இது குறித்து நூத்தலக்கரை கிராம மக்கள் எதிர்த்து தனசேகரனி டம் கேள்வி கேட்டால், நான் வருவாய்த்துறைக்கும் ஊராட்சி துறைக்கும் பல லட்சம் லஞ்சப்பனம் கொடுத்துள்ளேன்,உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுவதாக கூறப்படுகிறது.