விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல ஈரால் தெற்கு தெருவை சேர்ந்த வீரய்யா மகன் முருகன் வயது (60) இவர் கோவில்பட்டியில் கூலி வேலை செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்கீழ ஈரால் வழியாக மேல ஈராலுக்கு வந்து கொண்டிருந்தார்.அவருக்குப் பின்னால் விளாத்திகுளம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசித்தன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் மகன் ஈஸ்வர் பிரகாஷ் வயது (26) என்பவர் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிபத்துகுள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த கார் மீது கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதி அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காரை ஓட்டி வந்த ஈஸ்வர் பிரகாசுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் தொழிலாளி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதியில் வருகின்ற 28-ம் தேதி கனிமொழி எம்.பி.-யின் மக்கள் களம் நிகழ்ச்சி!
அடுத்த
கிணற்றில் விழுந்து முதியவர் பலி.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026