விளாத்திகுளம் அருகே தாய் கண் முன்னே தண்ணீர் வாகனம் மோதி இரண்டு வயது சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் குளகாகட்டான்குறிச்சி பகுதியைச்சேர்ந்த பொன்னுச்சாமி-குமரவள்ளி தம்பதியரின் இரண்டு வயது மகள் சோனா ஸ்ரீ, இவர் வழக்கம் போல் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார், அப்போது அவ்வழியாக வந்த மினரல் தண்ணி (TATA ACE) வண்டியை நிறுத்தி தாய் குமரவள்ளி தண்ணி பிடித்துக்கொண்டிருந்தார், இந்த நிலையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி சோனா ஸ்ரீ TATA ACE வாகனத்தின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்,இதை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுநர் வாகனத்தை முன்னாள் நகர்த்திய போது, வாகனம் சிறுமியின் தலைமீது ஏறி தலைநசிங்கி தாய் குமரவள்ளி கண்முன்னே சோனா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய புதூர் காவல் நிலைய போலீசார், சிறுமியின் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதாய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுனரான நடுக்காட்டூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பொன்னுத்துறை (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் கண் முன்னே இரண்டு வயது சிறுமி தலை நசிங்கி உயிரிழந்த சம்பவம் புதூர் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.