தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் விளாத்திகுளம் பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள மானாவரி சாகுபடியில் மகத்தான வருமானம் என்ற தலைப்பில், இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது, இந்த பயிற்சியில் ஈரோடு, தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த மண் காப்போம் இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் விவசாயிகள் கூட்டமைப்பு பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் பங்கு பெற்றனர், இந்தப் பயிற்சி மாணவரி சாகுபடியில் இயற்கை விவசாயம் துவங்கவும் மிகவும் பயனுள்ளதாக பயிற்சியானது வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு விளாத்திகுளம் தொகுதியில் மானாவாரி விவசாயத்திற்கு இயற்கை உரம் பயன்படுத்துதல் குறித்து கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் இதுபோன்ற பயிற்சியானது அடுத்த மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சுவாமி ஸ்ரீ முக தெரிவித்தார். இந்நிகழ்வில் பயிற்சியாளர்கள் கருப்பசாமி, பிரபாகரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பாக இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையால் துண்டிக்கப்பட்டசாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
மாசார்பட்டி கிராமத்திலிருந்து நிவாரண பொருள் வாகனத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் அனுப்பி வைத்தார்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026