விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மாத முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது!


மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி  வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தமிழ் மாத பிறப்பு மற்றும் தமிழ் மாத முதல் வெள்ளியை முன்னிட்டு,விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மாரி மழை பெய்திடவும்,விவசாயம் செழித்திட வேண்டியும், வீண் இருள் நீக்கி செல்வம் மற்றும் மன அமைதி பெறவும், குடும்ப நலம் மற்றும் ஐஸ்வரியம் பெருகவும், குத்துவிளக்கேற்றி, பூ,மஞ்சள்,குங்குமம் வைத்து, மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்கள் கூறி சிறப்பு விளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.


இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.