விளாத்திகுளம் அருகே குளத்தூர்- ராமேஸ்வரம் சாலையில் புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது குளத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள 1860 புகையிலை பாக்கெட் இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட சூரங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரபாண்டி வயது (46), என்பவரை குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகள், ரூபாய் 9000 ரொக்க பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சுந்தரபாண்டியனை சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 ஆண்டு நீண்ட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!
அடுத்த
ஆதி வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026