விளாத்திகுளம் அருகே விவசாயம் செழிக்க வேண்டி கோலாகலமாக நடைபெற்ற கலச விளக்கு வேள்வி:கஞ்சி கலயம் தீச்சட்டி ஆன்மிக ஊர்வலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் விவசாயம் செழிக்கவும், மழை வளம் பெருகவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 86-வது அவதாரப் பெருவிழா நடைபெற்றது,விழாவில் திருவிக சக்தி பீட வேள்விக்குழு பொறுப்பாளர் ஜெ. பத்மா சக்திக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கைச் சீற்றங்கள் தணியவும், மக்கள் மனிதநேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஏந்தியபடி, பக்தி முழக்கங்களுடன் ஆன்மிக ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் மன்றத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அன்னைக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மழை வளமும்... விவசாய வளமும்... மக்கள் நலமும் பெருக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.