விளாத்திகுளம் அருகே மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269- வது குருபூஜை மற்றும் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்!


போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சுழல்கோப்பை வழங்கி கௌரவிப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி கிராமத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக வீரமுழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜைவிழா மற்றும் லெக்கம்பட்டி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு லெக்கம்பட்டி யாதவ சமுதாய மக்கள் சார்பாக  மாபெரும் மூன்றாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.



சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் திருநெல்வேலி,ராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீரிப்பாய்ந்தன, சின்னமாடு போட்டிக்கு போக வர 6 மைல் தூரமும்,பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு போக வர 5 மைல் தூரமானது நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. 


போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இந்தமாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மற்றும் மதுரை அதிமுக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.