விளாத்திகுளம் அருகே கண்மாய்க்கு குளிக்க சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் முளைப்பாரி தெருவை சேர்ந்த வேலு என்பவரின் மகன் மூக்கையா (34) டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் தீபாவளி தினத்தன்று மாலையில் வீட்டிலிருந்து குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை... இதைத்தொடர்ந்து இன்று காலையில் இளம்புவனம் அருகே உள்ள ஊரணி கண்மாயில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கும், கோவில்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் குளத்தில் மூழ்கி கிடந்தவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை பார்த்து அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் அவர் மூக்கையா என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை எட்டையாபுரம் போலீசார் எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Vilathikulam
கண்மாய்க்கு குளிக்க சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை!
அடுத்த
செல்போனில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்?இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026