விளாத்திகுளம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 75 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன! நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் "விநாயகர் சதுர்த்தியை" முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் ஏராளமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வந்த நிலையில், தற்போது விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், காவல்துறையின் அனுமதியுடன் ஏராளமான விநாயகர் சிலைகள் தெருக்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டு கடந்த 7 தினங்களாக பூஜிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,
இன்று விளாத்திகுளத்திலிருந்து அருகே உள்ள வேம்பார் கடலில் கரைப்பதற்காக விளாத்திகுளம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 75 விநாயகர் சிலைகள் ஏராளமான வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் கடற்கரையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டப்பின் உற்சாகமாக மேளதாளத்துடன் அனைத்து விநாயகர் சிலைகளையும் பொதுமக்கள் பத்திரமாக கடலிலுக்கு எடுத்துச்சென்று அவற்றை கடலில் கரைத்து புனித நீராடி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இங்கு அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருப்பதால், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததோடு மட்டுமின்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vilathikulam
75 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையபுரத்தில், 61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா கொண்டாட்டம்!
அடுத்த
இசை மாமேதை நல்லப்பசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மரியாதை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026