தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (42), கதிர்வேல் ஆட்டோ மூலம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதியில் இருந்து வேப்பலோடை உப்பளத்திற்கு ஆட்களை ஏற்றி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேப்பலோடை உப்பள வேலை முடிந்த பின் வேப்பலோடையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி ஆட்டோவில் உப்பளத் தொழிலாளர்களை ஏற்றி வந்து கொண்டிருந்தது, அப்போது மீனாட்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,
இதில் ஆட்டோ ஓட்டுனர் கதிர்வேல், வேல் மாரியம்மன் (39), அருளம்மாள்(38), ஞானசிகாமணி (52), பேச்சியம்மாள்(35), முத்துமாரி(43), ராசம்மாள்(43) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது, இதனை அடுத்து காயமடைந்தவர்களை, விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதில் ஞானசிகாமணிக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
ஆட்டோ கவிழ்ந்து விபத்து -7 பேர் காயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026