தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து 679 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். நடைபெற்ற இந்த மக்களுடன் முதல்வர் முகாமை எட்டையாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் வில்லியம் ஜோசப், உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
Vilathikulam
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 679 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
அடுத்த
கண்மாய் நீரில் மூழ்கி முதியவர் பலி.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026