விளாத்திகுளம் அருகே பைனான்சியர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 07.09.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஏனாதி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் (பைனான்சியர்) நாகஜோதி (50) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் காரில் வைத்து தீயிட்டு எரித்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான அண்ணாவி மகன்களான மைக்கேல்ராஜ் (29) அவரது சகோதரரான குழந்தை கனி (26), யுவராஜ் மகன் சுந்தர கணபதி (எ) கணபதி (26) மற்றும் சாயல்குடி உரைக்கிணறு பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் மைக்கேல்ராஜ் (எ) மாரி (27) ஆகியோரை குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான மைக்கேல்ராஜ், குழந்தை கனி, மைக்கேல்ராஜ் (எ) மாரி மற்றும் சுந்தர கணபதி (எ) கணபதி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. விஜயலெட்சுமி அவர்களும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான அண்ணாவி மகன்களான 1) மைக்கேல்ராஜ், அவரது சகோதரரான 2) குழந்தை கனி, யுவராஜ் மகன் 3) சுந்தர கணபதி (எ) கணபதி , சாயல்குடி உரைக்கிணறு பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் 4) மைக்கேல்ராஜ் (எ) மாரி, ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சீனிவாச பெருமாள் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு வழிபாடு!
அடுத்த
108 கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவுகளுடன் சமூக நலத்துறை சார்பில் வளைகாப்பு அர்ச்சதை-சீமந்த பொருட்களை வழங்கிய நவாஸ் கனி M P!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026