தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 14ம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து 10 நாள் திருவிழாவில் தினந்தோறும் ஆனந்தவள்ளி மற்றும் கைலாசநாதர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. பின்னர் திருத்தேரில் எழுந்தருளி ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க வீதிகளில் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்வில் பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம்,அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்,போடு பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்,நான்குரத வீதிகளில் வந்த சுவாமி மற்றும் அம்பாளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் திருக் கோவில் சித்திரை திருத்தேரோட்ட விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொண்ட MLA மார்க்கண்டேயன்!
அடுத்த
போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026