தூத்துக்குடியில் பணியின்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலரை பணியில் இருந்து நீக்கம் (Dismissed from Service) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு.தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 09.05.2021 அன்று மத்தியபாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என்று காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி விட்டு சென்றவர். அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் 10.05.2021 அன்று கைது செய்யப்பட்டு, பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிபதி உத்தரவின்படி கடந்த 22.05.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.இவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் தலைமை காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள தலைமை காவலர் பொன்மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் (Dismissed from Service) செய்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
கொலை வழக்கில் தலைமை காவலர் கைது - மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.56.40லச்சம் மதிப்பீட்டில் சுகாதார மைய கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
அடுத்த
மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத்தொகை !
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026